பாக்., சிறுமிக்கு காம்பிர் உதவி | அக்டோபர் 21, 2019

தினமலர்  தினமலர்
பாக்., சிறுமிக்கு காம்பிர் உதவி | அக்டோபர் 21, 2019

புதுடில்லி: பாகிஸ்தானின் சிறுமி இதய சிகிச்சைக்கு உதவிய காம்பிருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

பாகிஸ்தானின் 6 வயது சிறுமி ஒமைமா அலி. கடந்த 2012ல் இந்தியா வந்து நொய்டா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து திரும்பினர். தற்போது சிறுமிக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசப்பிடம் உதவி கேட்டனர். அவர் இந்திய அணி முன்னாள் வீரர் காம்பிர், பா.ஜ., பார்லிமென்ட் உறுப்பினராக உள்ள காம்பிரை தொடர்பு கொண்டார்.

உடனடியாக செயலில் இறங்கிய காம்பிர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசி, விசா உள்ளிட்ட ஏற்பாடுகளை விரைந்து செய்து தருமாறு கேட்டார். காம்பிர் கோரிக்கை ஏற்கப்பட, விரைவில் ஒமைமா அலி, அட்டாரி சாலை வழியாக இந்தியா வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள உள்ளார். காம்பிரின் இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மூலக்கதை