துாங்கி வழிந்த ரவி சாஸ்திரி | அக்டோபர் 21, 2019

தினமலர்  தினமலர்
துாங்கி வழிந்த ரவி சாஸ்திரி | அக்டோபர் 21, 2019

 ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி துாங்கி வழிந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 57. எவ்வளவு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ரவி சாஸ்திரியை மட்டும் இந்திய ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர். தொடர்ந்து விமர்சனம் செய்து வருவர். சமீபத்திய விண்டீஸ் தொடரில், மலைகளுக்கு முன் இருந்து ‘செல்பி’ எடுத்து ‘டுவிட்டரில்’ வெளியிட்டார். இது விமர்சனத்தை சந்தித்தது.

நேற்று தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது காலரியில் இருந்த ரவி சாஸ்திரி அயர்ந்து துாங்கி விட்டார் போல. அருகில் இருந்த சுப்மன் கில் இதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். 

இந்த போட்டோ நேற்று இணையதளத்தில் வேகமாக பரவியது. மீண்டும் ரவி சாஸ்திரியை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

ஒரு ரசிகர்,‘விருப்பப்படி குடிப்பது, அலுவலக நேரத்தில் துாங்குவது, கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது என, உலகில் சிறப்பான வேலை செய்கிறார் ரவி சாஸ்திரி,’ என்றார்.

மற்றொரு ரசிகர்,‘துாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ. 10 கோடி சம்பளம் பெறுகிறார் ரவி சாஸ்திரி. உண்மையில் இவர் அதிர்ஷ்டசாலி தான். அருகில் உள்ள சுப்மன் கில் தானும் இப்படித்தான் இருக்க விரும்புவார்,’ என்றார்.

வோஹ்ரா என்ற ரசிகர்,‘ரவி சாஸ்திரி முன் குடிநீர் பாட்டிலுக்குப் பதில் மது பாட்டிலை வைத்து விட்டனர் போல,’ என்றார். 

மூலக்கதை