மாஜி அமைச்சர் சிவகுமாரின் டில்லி வீட்டில் சி.பி.ஐ., 'ரெய்டு'

தினமலர்  தினமலர்
மாஜி அமைச்சர் சிவகுமாரின் டில்லி வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, கர்நாடக காங்கிரசை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் டில்லி வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

முறைகேடான பண பரிமாற்ற வழக்கில், கர்நாடக காங்கிரசை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சிவகுமாரை, அமலாக்க துறை அதிகாரிகள், டில்லியில் கைது செய்தனர். பின், டில்லி அமலாக்க துறை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், அவர், மின் துறை அமைச்சராக இருந்த போது, சோலார் மின் உற்பத்தி திட்டத்தில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், டில்லி சப்தர் ஜங் பகுதியிலுள்ள, சிவகுமாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்க துறை அதிகாரிகள், சிவகுமாரை விசாரித்துள்ள நிலையில், தற்போது சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனையும், அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நமது நிருபர் -

மூலக்கதை