ரகசிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் கருப்பாக வெளியான முதல் பக்கம்

தினகரன்  தினகரன்
ரகசிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் கருப்பாக வெளியான முதல் பக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரகசிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு பத்திரிகைகளின் முதல் பக்கம் நேற்று கருப்பாக வெளியிடப்பட்டது ஆஸ்திரேலியாவில், போர்க் குற்றங்கள், குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் பத்திரிகைகளில்  சமீபத்தில் வெளியானது. இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசு தரப்பு கடும் கோபம் அடைந்தது. இதன் எதிரொலியாக, முக்கிய பத்திரிகை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு பத்திரிகைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‘பத்திரிகைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும் அதேசமயத்தில் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்’ என்று அரசு கூறியது. இந்த பிரச்னை தொடர்ந்து சிறிது, சிறிதாக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் இடையே பிரச்னையை பெரிதாக்கியது.இதன் உச்சக்கட்டமாக, பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘ரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும்  எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்கள், நேற்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தை கருப்பாக வெளியிட்டன. இதற்கு டிவி மற்றும் ரேடியோ நிறுவனங்களும் ஆதரவு அளித்து செய்தி வெளியிட்டன. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறுகையில், “பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டதுதான். யாராக இருந்தாலும் சட்டத்துக்கு தலைவணங்கித்தான் ஆக வேண்டும்’’ என்று கூறினார்.

மூலக்கதை