திருச்சி-மதுரை தேஜஸ் ரயில் ரத்து

தினகரன்  தினகரன்
திருச்சிமதுரை தேஜஸ் ரயில் ரத்து

சென்னை:  தெற்கு ரயில்ேவ வெளியிட்ட அறிக்கை: எழும்பூர்- மதுரை இடையே இன்று காலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருச்சி- மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் மதுரை- சென்னை எழும்பூர் இடையே இன்று மாலை 3  மணிக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் மதுரை- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு வந்தடையும் ரயில் நாளை காட்டாங்கொளத்தூர்- அரக்கோணம் ரத்து செய்யப்படுகிறது.அதைப்போன்று கடற்கரை- செங்கல்பட்டு இடையே நாளை காலை 9.32, 10.56, 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 10.08, 11.48  மணிக்கு நாளை இயக்கப்படும் ரயில் கூடுவாஞ்சேரி- செங்கல்பட்டு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

மூலக்கதை