செல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு

தினகரன்  தினகரன்
செல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு

வேலூர்:  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 18ம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து  ஆன்ட்ராய்ட் செல்போன் பறிமுதல் செய்தனர். இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால், முருகனுக்கு மனைவியுடன் சந்திப்பு உள்ளிட்ட சலுகைகள் 3 மாதத்துக்கு ரத்து செய்யப்படுகிறது. அவர்  தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்’ என்றனர். 

மூலக்கதை