சிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்!

இந்தியாவின் 8வது முன்னாள் அதிபர், அறிவு மேதை அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை, சிங்கப்பூர் அப்துல் கலாம் விஷன் அமைப்பு குடும்ப தினமாக இன்று காலை முதல் மாலை வரை பொடானிகல் கார்டன் பூங்காவில் கோலாகலமாகக் கொண்டாடியது.. உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து படைத்த இந் நிகழ்வை, மதிப்பிற்குரிய தலைவர் தூதர் கேசவபாணியும், அன்னாரின் அன்பு மனைவியாரும் முன்னின்று நடத்தினர்.

ஆடல், பாடல், விளையாட்டுப் போட்டிகளுடன் பெற்றோர்-குழந்தைகள் கலந்து சிறப்பித்த இதில் பல வயதுக் குழந்தைகளுக்கும் நிறையப் பரிசுகள் தந்து ஊக்குவித்ததுடன், சுவையான உணவுகளும், தின்பண்டங்களும் வழங்கப்பட்டன..இதன் சிறப்பம்சம், வாழ்வில் வசதி குறைந்த பல இன முதியோர்களை, ஸ்ரீ நாராயணா முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து நாட்டின் பசுமைப் பகுதிகளை நகரும் வண்டியில் அவர்களுக்கு சுற்றிக் காட்டியதும், அவர்களின் விருப்ப உணவுகளைத் தந்து மகிழ்வித்ததும் ஆகும். பல நடனங்களும் அவர்கள் முன்னிலையில் படைக்கப்பட்டன. தொண்டூழியர்கள் செயலாளர் அருமை சந்திரன், ரஜீத் ராவுத்தர், நிசார், ஜான் ராமமூர்த்தி, முருகன் போன்றோரின் கடுமையான உழைப்பு நிகழ்ச்சிக்கு நிறைவைச் சேர்த்தது. –ஏபிஆர்.

மூலக்கதை