பிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு

தினமலர்  தினமலர்
பிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு

நடிகர்கள் ஷாருக்கான், அமிர்கான், நடிகைகள் கங்கனா, சோனம் கபூர் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது என்பது குறித்து பாலிவுட் நட்சத்திரங்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். ஷாருக்கான், அமிர்கான் உள்ளிட்டோர் தங்களின் கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய மோடி, மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், போதனைகளையும் பரப்பியதில் உலகின் பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்றார்.

மூலக்கதை