இந்திய தொடர்: வங்கதேச அணி அறிவிப்பு | அக்டோபர் 17, 2019

தினமலர்  தினமலர்
இந்திய தொடர்: வங்கதேச அணி அறிவிப்பு | அக்டோபர் 17, 2019

தாகா: இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் நவம்பர் 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. 

அடுத்த இரண்டு போட்டிகள் ராஜ்கோட் (நவ. 7), நாக்பூரில் (நவ. 10) நடக்கும். இதற்கான, 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது.

சுழற்பந்துவீச்சாளர் அராபத், வேகப்பந்துவீச்சாளர் அல் அமின் ஹொசைன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த துவக்க வீரர் தமிம் இக்பால் மீண்டும் அணியில் இடம்பெற்றார்.

அணி விவரம்: சாகிப் அல் ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், முகமது நயீம், முஷ்பிகுர், மகமுதுல்லா, ஆசிப், மொசாதெக், அமினுல், அராபத், முகமது சைபுதின், அல் அமின் ஹொசைன், முஸ்தபிஜுர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம்.

மூலக்கதை