ராஞ்சி டெஸ்டில் தோனி * உற்சாகத்தில் ரசிகர்கள் | அக்டோபர் 17, 2019

தினமலர்  தினமலர்
ராஞ்சி டெஸ்டில் தோனி * உற்சாகத்தில் ரசிகர்கள் | அக்டோபர் 17, 2019

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியை காண தோனி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் சாதித்த இந்தியா 2–0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ராஞ்சியில் துவங்குகிறது.

இப்போட்டியை காண வருமாறு ராஞ்சியை சேர்ந்த ‘சீனியர்’ விக்கெட் கீப்பர் தோனிக்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்ற தோனி, டெஸ்ட் போட்டியை காண வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 கடைசியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனியின் வருகையால் கூடுதல் ரசிகர்கள் மைதானத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜீ கூறுகையில்,‘‘ராஞ்சிக்கு தோனி உறுதியாக வருவார். டெஸ்ட் போட்டியை காண, ஏதாவது ஒருநாள் மைதானத்துக்கு வரவுள்ளதாக கேள்விப்பட்டேன்,’’ என்றார்.

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தை காண தோனி வந்திருந்தார். இதுபோல மீண்டும் வருவார் எனத் தெரிகிறது. 

இலவச ‘டிக்கெட்’

இந்திய ராணுவம், துணை ராணுவ படையினர், ஜார்க்கண்ட் போலீசார் என இவர்களை கவுரவிக்கும் வகையில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை காண, 5000 இலவச டிக்கெட்டுகளை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் வழங்கியுள்ளது. 

மூலக்கதை