இந்திய வீரர்களுக்கு கங்குலி விருந்து | அக்டோபர் 18, 2019

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்களுக்கு கங்குலி விருந்து | அக்டோபர் 18, 2019

கோல்கட்டா: பி.சி.சி.ஐ., தலைவராக பொறுப்பேற்கவுள்ள கங்குலி, சக வீரர்களுக்கு கோல்கட்டாவில் விருந்து தர உள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி 47. பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 23ம் தேதி முறைப்படி பதவியேற்கிறார்.

இதன் பின் 25ம் தேதி தன்னுடன் விளையாடிய வீரர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதில் முன்னாள் வீரர்கள் முகமது அசார் (ஐதராபாத் சங்க தலைவர்), லட்சுமண், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

இந்திய அணியின் சிறந்த துவக்க ஜோடியாக கங்குலியுடன் இணைந்து வலம் வந்த சச்சினும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மூலக்கதை