தென் ஆப்ரிக்க வீரருக்கு ஜெயில் | அக்டோபர் 18, 2019

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்க வீரருக்கு ஜெயில் | அக்டோபர் 18, 2019

 பிரிடோரியா: தென் ஆப்ரிக்க வீரர் குலாம் போதி 40. இவர் 2 ஒருநாள், 1 ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்றுள்ளார்.

 கடந்த 2015ல் அங்கு நடந்த ராம் ஸ்லாம் தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சர்ச்சையில் சிக்கினார். இதில் 2018, நவ. 4ல் 8 பிரிவுகளில் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டார். இவருக்கான தண்டனை விவரத்தை நேற்று பிரிடோரியா கமர்சியல் கிரைம்ஸ் கோர்ட் தெரிவித்தது.

இதன் படி, போதிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட இருந்தது. கருணை காட்டும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்ய அனுமதி தரப்பட்டது.

மூலக்கதை