ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்

தினமலர்  தினமலர்
ஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்

நாக்பூர்: நாடு முழுவதும், கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த ஆண்டுஆகஸ்டு வரை, பயங்கரவாதம், தீவிரவாத ஒழிப்பு உட்பட, பல்வேறு நடவடிக்கைகளின் போது, 292 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர்.


கடந்த, 1959, அக்டோபர், 21ல் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 10 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அனுசரிப்புஇதையடுத்து ஆண்டு தோறும், நாடு முழுவதும், அக்., 21ம் தேதி, காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பயங்கரவாத, தீவிரவாத ஒழிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் போது, 292 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

பயங்கரவாதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் மட்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 67 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவர்களில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த, 40 வீரர்களும் அடங்குவர். எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 41 பேர், இந்தோ - திபெத் எல்லை படையைச் சேர்ந்த 21 பேர், ஜம்மு - காஷ்மீர் காவல் படையைச் சேர்ந்த 24 பேர், கடந்த ஓராண்டில் உயிர் தியாகம் செய்து உள்ளனர்.


இந்த ஆண்டு, மே மாதத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலியில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில் பலியான, 15 போலீசார் உட்பட, மஹாராஷ்டிராவில், 20 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளனர். பட்டியல்சத்தீஸ்கரில், 14; கர்நகாடகாவில், 12; ரயில்வே பாதுகாப்பு படையில், 11; டில்லி மற்றும் ராஜஸ்தானில், தலா, 10; பீஹாரில், ஏழு; மத்திய தொழில் பாதுகாப்பு படையின், ஆறு வீரர்களும், உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த பட்டியலில், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மணிப்பூர், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும், சஷாஸ்திர சீமா பால், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரும், இடம் பெற்றுள்ளனர்.

எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையிலேயே, அதிக எண்ணிக்கையிலான துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.நக்சல்கள், பயங்கரவாதிகள், சாராயம் மற்றும் மணல் மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்டைககள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பணிகளில், மாநில போலீசார் உயிரிழந்துள்ளனர், சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில், 35 ஆயிரத்து, 136 போலீசார், உயிர் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை