உணவுப் பொருள் வியாபாரத்திற்கு உரிமம் அவசியம்: உணவு பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
உணவுப் பொருள் வியாபாரத்திற்கு உரிமம் அவசியம்: உணவு பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தல்

பண்ருட்டி:உணவு உற்பத்தி, விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிமம் பெற வேண்டியது அவசியம் என, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுகுந்தன் பேசினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு துறை சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கம், பண்ருட்டி வாசவி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அனைத்து வியாபாரிகள் சங்க பொது செயலாளர் மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவர் சுகுந்தன் பேசியதாவது:உணவு பொருள் வியாபாரத்திற்கு லைசென்ஸ், ஆர்.சி., அவசியம் இருக்க வேண்டும். பண்ருட்டியில், இந்தாண்டு இதுவரை 200 பேர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக இனிப்பு தயார் செய்பவர்களும் உரிமம் பெற வேண்டும். விற்பனை செய்யப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை, மறுமுறை பயன்படுத்தகூடாது. உணவில் கலர் பவுடர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்ரமணியன், சந்திரசேகர், ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், வியாபார பிரமுகர்கள் யாமினி ஊறுகாய் மூர்த்தி, சேகர், உணவு பொருள்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். ஜெயமுர்த்தி நன்றி கூறினார்.

மூலக்கதை