ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக்

தினமலர்  தினமலர்
ரகுல்பிரீத்சிங் கொடுக்கும் பிரேக்

இந்தியன்-2 மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரகுல்பிரீத்சிங். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே தான் நடித்த படங்கள் தோல்விகளை சந்தித்து வந்ததால் ராசியில்லாத நடிகை என்கிற பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ரகுல்பிரீத்சிங், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், படங்களின் தோல்விக்கு நான் காரணமல்ல, ஆனபோதும் படங்கள் ஓடவில்லை என்றதும் அந்த பழியை என் மீது போடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இனிமேல் கிடைக்கிற படங்களை யெல்லாம் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. படங்களின் கதை மட்டுமின்றி இயக்குனர்கள், ஹீரோக்கள் என அனைத்தையும் செலக்ட் பண்ணித்தான் படங்களில் கமிட்டாவேன் என்று தெரிவித்துள்ள ரகுல்பிரீத்சிங், ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்காமல் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்குமிடையே பிரேக் கொடுத்து நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

மூலக்கதை