அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்?

தினமலர்  தினமலர்
அஜீத்தின் வலிமை படத்தில் நடிக்கிறாரா ஜான்விகபூர்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக் என்ற படத்தில் அறிமுகமானார். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே அந்த படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் இறந்த பிறகு தான் அந்தபடம் வெளியானது. அதையடுத்து இப்போது அரை டஜன் ஹிந்தி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜான்விகபூர். இந்நிலையில், தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த அவர், தெலுங்கில் விஜயதேவரகொண்டாவுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

அதேபோல், தமிழில் அவரது தந்தை போனிகபூர் தயாரித்த நேர்கொண்டபார்வை படத்திலேயே ஒரு கேரக்டரில் ஜான்விகபூர் நடிப்பார் என்று கருதப்பட்ட நிலையில் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால் மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் ஜான்விகபூர் நடிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கை தெலுங்கிலும் போனிகபூர் தயாரிப்பதால் அந்த படத்திலும் ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

மூலக்கதை