விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ்

தினமலர்  தினமலர்
விதவிதமான உணவுகளால் பூஜா ஹெக்டேவை அசத்திய பிரபாஸ்

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தெலுங்கில் சில வருட காத்திருப்புக்கு பிறகு தற்போது அதிகம் தேடப்படும் கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் படங்கள் மற்றும் இந்தியில் உருவாகி வரும் ஹவுஸ்புல் படத்தின் புதிய பாகம் ஆகியவற்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார் .அதுமட்டுமல்ல சாஹோ படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும் ஜான் என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸுடன் நடந்த சுவாரசியமான அனுபவங்கள் குறித்து கூறியுள்ள பூஜா ஹெக்டே, “பிரபாஸ் பழகுவதற்கு உண்மையிலேயே மிகவும் மென்மையான மனிதர்.. அதுமட்டுமல்ல தனது ஆஸ்தான சமையல்காரர் மூலமாக தினசரி படப்பிடிப்புத் தளத்திற்கு விதவிதமான உணவு வகைகளை வரவழைத்து விருந்து வைத்து அசத்துவார்” என்று கூறியுள்ளார். ராதாகிருஷ்ணா என்பவர் இயக்கிவரும் இந்த படம் ஒரு ரொமான்டிக் காதல் கதையாக உருவாகி வருகிறது.

மூலக்கதை