ஹீரோவாகிறார் நீயா நானா கோபிநாத்

தினமலர்  தினமலர்
ஹீரோவாகிறார் நீயா நானா கோபிநாத்

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சந்தானம் சினிமாவில் காமெடியனாகி பின்னர் ஹீரோவாகிவிட்டார். அதன்பிறகு தனுஷ் நடித்த 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இப்போது முன்னணி ஹீரோவாகி விட் டார்.

சந்தானம், சிவகார்த்திகேயனைத்தொடர்ந்து இப்போது கவின், ரியோராஜ் போன்ற சீரியல் நடிகர்களும் சினிமாவில் ஹீரோவாகியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபிநாத்தும், இது எல்லாத்துக்கும் மேல -என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை விஜய காந்த் நடித்த கண்ணுப்படப்போகுதய்யா படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்குகிறார். குழந்தை களை மையமாகக்கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் பல குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

மூலக்கதை