அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு

தினமலர்  தினமலர்
அக்டோபர் 22ல் ஆதித்ய வர்மா இசை வெளியீடு

தெலுங்கில் விஜயதேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் உருவானது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயக னாக நடித்தார். ஆனால் படம் திரைக்கு வரும்நேரத்தில் அந்த படத்தை தயாரித்த இ 4 எண்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் படம் திருப்தியாக இல்லை என்று கிடப்பில் போட்டு விட்டு மீண்டும் கிரிசய்யா என்ற இயக்குனரை வைத்து அதே படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தது.

துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள அப்படம் தீபாவளிக்கு பிறகு நவம்பர் 8-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் 22-ந்தேதி ஆதித்ய வர்மா படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக அப்படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

மூலக்கதை