ஆப்பிளின் புதிய ஐபேடு

தினமலர்  தினமலர்
ஆப்பிளின் புதிய ஐபேடு

ஆப்பிள் நிறுவனத்தின், புதிய துவக்க நிலை, ‘10.2 ஐபேடு’ விற்பனை, இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த ஐபேடை, ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் செய்தது.இந்த ஐபேடு இரண்டு விதமாக வந்துள்ளது.


10.2 அங்குல திரையுள்ள இந்த ஐபேடு, ‘வைபை’ மற்றும் ‘வைபை பிளஸ் செல்லுலார்’ என, இரு விதங்களில் வெளிவந்துள்ளது.இரண்டு மாடல்களும் சமீபத்திய ஐபேடு ஓ.எஸ்., இயங்குதளத்தில் செயல்படக்கூடியவை. 32 ஜி.பி.,யுடன், வைபை மூலமாக மட்டுமே செயல்படும் மாடலின் விலை, 29 ஆயிரத்து, 900 ரூபாய்.மேலும், 128 ஜி.பி.,யுடன் வைபை இணைப்பில் செயல்படும் ஐபேடின் விலை, 37 ஆயிரத்து, 900 ரூபாய். இதுவே, 32 ஜி.பி., வைபை மற்றும் செல்லுலார் இணைப்புகளில் செயல்படும் ஐபேடு, 40 ஆயிரத்து, 900 ரூபாய் ஆகிறது. இந்த மாடலில், 128 ஜி.பி., நினைவகம் கொண்டது, 48 ஆயிரத்து, 900 ரூபாய்.

மூலக்கதை