‘ஒன்பிளஸ் போல்டபிள்’ இப்போதைக்கு இல்லை

தினமலர்  தினமலர்
‘ஒன்பிளஸ் போல்டபிள்’ இப்போதைக்கு இல்லை

‘பாப் அப் கேமரா, டிஸ்பிளே பிங்கர் பிரின்ட், நாட்ச் டிஸ்பிளே’ என, வித விதமான தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகம் செய்து ஓய்ந்த நிலையில், தற்போது, ‘போல்டபிள் போன்’களை அறிமுகம் செய்வதில், நிறுவனங்கள் துடிப்பாக இருக்கின்றன.

ஆனால், ‘ஒன்பிளஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, பீட் லவ் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது.போல்டபிள் கருத்தாக்கம் இப்போதைக்கு மிகவும் முதிர்ச்சியற்ற ஒன்றாகும். அவற்றின் உபயோகம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்கிறார் அவர்.ஆக, இப்போதைக்கு ஒன்பிளஸ் நிறுவனத்திடமிருந்து போல்டபிள் ஸ்மார்ட்போன் வராது என உறுதியாக கருதலாம்.வாடிக்கையாளர்களுக்கு வருத்தம்; போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சி!

மூலக்கதை