சாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு

தினமலர்  தினமலர்
சாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு

மும்பை : ரிசர்வ் வங்கியின், அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை தொட்டுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:இம்மாதம், 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 187.9 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவான, 43 ஆயிரத்து, 971 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 31.22 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு முந்தைய வாரத்திலும், அதுவரை இல்லாத வகையில், அன்னிய செலாவணி கையிருப்பு, 424 கோடி டாலர் அதிகரித்து, 43 ஆயிரத்து, 783 கோடி டாலராக அதிகரித்திருந்தது.

இது இந்திய மதிப்பில், 31.09 லட்சம் கோடி ரூபாய்.நடப்பு மாதம், 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கம் இருப்பு மதிப்பு, 2,833 கோடி ரூபாய் குறைந்து, 1.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும், 70 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்து, 362.3 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில், 25 ஆயிரத்து, 723 கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி, தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை