உடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்

தினமலர்  தினமலர்
உடல் நிலை தேறியது; மருத்துமனையில் இருந்து அமிதாப் டிஸ்சார்ஜ்

கல்லீரல் பாதிப்பால் கடந்த வாரம் உடல் நிலை மோசமாகி, மும்பை நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அமிதாப்பச்சன், உடல் நிலைத் தேறி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்.


மருத்துவர்கள் அறிவுரைப்படி, அவருக்கு தொடர் ஓய்வு தேவைப்படுவதால், அவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

கடந்த 1982ல் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு விபத்தில் சிக்கினார். அப்போது, அவருக்கு ரத்தம் தேவைப்பட்டு, ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தத்தில் ஹெபாபடிஸ் பி நோய் பாதிப்பு இருந்து, அமிதாப்பின் உடலில் நோய்த் தொற்று ஏற்பட்டது. இதனால், அமிதாப்பின், கல்லீரல் பாதிக்கப்பட்டது. கல்லீரல் எழுபத்தைந்து சதவீதம் கெட்டுப் போய், செயல் இழந்து விட்டதாக, சமீபத்தில் அமிதாப்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், கடந்த 15ம் தேதி இரவு, அவருடைய உடல் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அவர், அவசர அவசரமாக நானாவது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, உடல் நிலை தேறி, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.

மூலக்கதை