கல்கி சாமியாரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் முயற்சி

தினகரன்  தினகரன்
கல்கி சாமியாரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் முயற்சி

சென்னை: கல்கி சாமியாரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் கல்கியை கடந்த 2 ஆண்டுகளாக பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளனர். கல்கி,மனைவியின் இருப்பிடத்தை கூற மகன் கிருஷ்ணன்ஜி, மருமகள், செயல் அதிகாரி உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து கல்கி இருப்பது ஆந்திராவிலா, தமிழ்நாட்டிலா, கர்நாடகத்திலா என்பது தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மூலக்கதை