கபடி: அமிர்தா பள்ளிகள் வெற்றி

தினகரன்  தினகரன்
கபடி: அமிர்தா பள்ளிகள் வெற்றி

சென்னை: அமிர்தா வித்யாலயம் சார்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான  6வது தொகுப்பு கபடி போட்டி  சென்னை கலைஞர் நகர் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்திய கபடி அணியின் முன்னாள் வீரரும், புரோ கபடி அணிகளுடைய முன்னாள் பயிற்சியாளருமான காசிநாதன் பாஸ்கரன் இந்த போட்டியை தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் 175 பள்ளிகளை சேர்ந்த 181 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் யு17, யு19  பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு என்று தனித்தனியாக 3 நாட்கள் நடந்தன.  இப்போட்டியின் 4 இறுதிப் போட்டிகளிலும் அமிர்தா  பள்ளிகளே வெற்றிபெற்றன. யு17 மாணவ, மாணவிகள் பிரிவுகளில்  கலைஞர் நகர் அமிர்தா வித்யாலயம் பள்ளியும், யு19 மாணவ, மாணவிகள் பிரிவுகளில் நல்லம்பாளையம் அமிர்தா வித்யாலயம் பள்ளியும் வெற்றிபெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு முன்னாள் சர்வ தேச கால்பந்து வீரர் எம்.சங்கர் பரிசளித்தார்.  விழாவில்  உடற்கல்வி இயக்குநர்கள் கண்ணன் (அமிர்தா), பிராங்கிளின் (கோ.பெருமாள்), ரகுநாதன் (வாணி),  அமிர்தா பள்ளி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் சுபாஷினி  அரிதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மூலக்கதை