தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்

தினமலர்  தினமலர்
தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்

மகிழ்திருமேனி டைரக்ஷனில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'தடம்'. வித்தியாசமான விறுவிறுப்பான திரைக்கதையுடன் இதில் மாறுபட்ட நடிப்பை வழங்கி இருந்தார் அருண் விஜய். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் உடனடியாக விலைபோனது. தற்போது இந்த படத்தின ரீமேக்கில் தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனி அருண்விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

கிஷோர் திருமலா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ். அனேகமாக இவர் படத்தில் வித்யா நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது. சமீபத்தில் பூரிஜெகநாத் டைரக்ஷனில் ராம் நடித்த ஸ்மார்ட் சங்கர் படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு அது வியாபார ரீதியாக உதவும் எனக் கணக்கிட்டுள்ளது தயாரிப்பாளர் தரப்பு.

மூலக்கதை