மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி

தினமலர்  தினமலர்
மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி

கடந்த வருடம் மலையாளத்தில் ‛ஹே ஜூடு' என்கிற படத்தில் நிவின்பாலி ஜோடியாக நடித்து, முதன்முதலாக மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் த்ரிஷா. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படத்தில் ஜோடியாக நடித்த இவருக்கு, இந்த வருடம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கதவை தட்டி உள்ளது.

த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலுடன் மீண்டும் ஒரு படத்திற்காக இணைகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.. அது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று ஜீத்து ஜோசப் தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.

மூலக்கதை