சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்

தினமலர்  தினமலர்
சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபாஸ் நடிப்பில் சாஹோ என்கிற படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மிக பிரம்மாண்டமாக வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறினாலும் வசூலில் ஓரளவு நிறைவாகவே சாதித்தது,

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது அவுட்ஷைனி இந்தியா என்கிற லக்கேஜ் பேக்குகள் தயாரிக்கும் நிறுவனம் மதுப்பூர் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்துள்ளது. இதில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது ;

சாஹோ பட தயாரிப்பாளர்கள் சாஹோ படத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை விளம்பரப்படுத்தி தருவதாக கூறியதாகவும் அதற்காக 37 லட்ச ரூபாய் தாங்கள் கட்டணமாக செலுத்தியதாகவும் கூறியுள்ளனர். மேலும் படத்தின் புரமோஷன் செலவுகளுக்காகவும் அதனுடன் சேர்த்து தங்களது நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரையும் செலவழித்தார்களாம். ஆனால் படம் வெளியானபோது படத்தில் எந்த ஒரு காட்சியிலும் தங்களது நிறுவனத்தின் பெயர் காட்டப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம், தற்போது சாஹோ பட தயாரிப்பு நிறுவனம் இது மோசடி புகார் அளித்துள்ளனர்.

மூலக்கதை