ஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

தினமலர்  தினமலர்
ஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசாரத்தில் மாணவியரை அமர வைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று காலை 9:30 மணியளவில் ஏழுசெம்பொன் கிராமத்தில் திண்ணை பிரசாரம் செய்தார்.அந்த பிரசார கூட்டத்தில் பள்ளி மாணவியர் அமர வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக சமூகவலைதளமான 'வாட்ஸ் ஆப்'பில் படத்துடன் தகவல் பரவியது. மேலும் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து ஏழுசெம்பொன் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கேசவனிடம் பள்ளி நேரத்தில் மாணவியர் திண்ணை பிரசார கூட்டத்தில் அமர்ந்திருந்தது குறித்து சி.இ.ஓ. முனுசாமி விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.

ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள தி.மு.க. கிளைச் செயலர் ஜெயச்சந்திரன் பள்ளிக்குச் சென்ற மாணவியரை அழைத்து கூட்டத்தில் அமர வைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை