வில்லிவாக்கம் சார்பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வில்லிவாக்கம் சார்பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

கொரட்டூர்: வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சென்னை கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சாந்தி நகர் 2வது தெருவில் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் நில மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்வது, கோயில் நிலம், நீர்நிலைகளை சர்வே எண்ணை மாற்றி பத்திரப்பதிவு செய்கின்றனர். நள்ளிரவை வரை புரோக்கர்கள் உதவியுடன் பத்திரப்பதிவு நடைபெறுகிறது என்று சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இதையடுத்து வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 12 போலீசார் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த புரோக்கர்கள் தப்பியோடினர்.

அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர்.

இதன்பிறகு அலுவலக கதவை பூட்டிக்கொண்டு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் புரோக்கர்களிடம் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அப்போது சில ஊழியர்கள், புரோக்கர்கள் போலீசில் சிக்காமல் இருக்க, தங்களிடம் இருந்த பணம், ஆவணங்களை வெளியே வீசி எறிந்தததாக தெரிகிறது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக சார்பதிவாளர் பாலு மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள், புரோக்கர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

இந்த சோதனையின்போது ரூ. 3. 42 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். நேற்று மாலை 5 மணிக்கு துவங்கி, இரவு 11 மணிவரை 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

இதன்காரணமாக பரபரப்பு நிலவியது.

.

மூலக்கதை