வடகிழக்கு பருவமழை தீவிரம்: 7 மாவட்டத்தில் மழை நீடிக்கும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வடகிழக்கு பருவமழை தீவிரம்: 7 மாவட்டத்தில் மழை நீடிக்கும்

சென்னை:வடகிழக்கு பருவமழை தமிழகம் புதுச்சேரியில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெப்ப சலனமும் ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது.

அதிகபட்சமாக சென்னை அயனாவரத்தில் நேற்று 130மிமீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர் 120மிமீ, சென்னை 100 மிமீ, டிஜிபி அலுவலகம் 80 மிமீ, எம்ஜிஆர் நகர் 70மிமீ, அம்பத்தூர் 60மிமீ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 50 மிமீ, மணப்பாறை, செங்குன்றம், வேதாரண்யம் 40மிமீ, கோவில்பட்டி, தென்காசி, உதகம்ண்டலம், உடுமலை பேட்டை, மேட்டுப்பாளையம், அண்ணாலைமலைப் பல்கலைக் கழகம், கேளம்பாக்கம் 30 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வட மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. அதனால் தமிழகம் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இது தவிர கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.   வருகிறது. தமிழகத்தில் இம்மாதத்தில் கிடைக்க வேண்டிய 9 சென்டிமீட்டர் மழையில் இதுவரை 8 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

.

மூலக்கதை