ஆப்கானில் குண்டு வெடித்து 65 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஆப்கானில் குண்டு வெடித்து 65 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்ததில 65 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கார்ஹர் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென குண்டு வெடித்ததில் மசூதியின் கூரை இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள், ஆண்கள் என 65 பேர் பலியாகினர்.  36 பேர் படுகாயம் அடைந்தனர். இது தற்கொலை படை தாக்குதலா அல்லது வேறு வகை குண்டு வெடித்ததா என்பது பற்றி தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு தலிபான்களோ அல்லது ஐஎஸ் அமைப்போ இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த ஆண்டில் முதல் 9 மாதங்களில் ஆப்கானில் 2,563 பேர் வெடிகுண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டு இருப்பதாக ஐநா சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை