100 பந்துகள் கிரிக்கெட் நாளை வீரர்கள் ஏலம்

தினகரன்  தினகரன்
100 பந்துகள் கிரிக்கெட் நாளை வீரர்கள் ஏலம்

லண்டன்: டெஸ்ட், ஒருநாள், டி20, டி10 போட்டிகளை தொடர்ந்து 100 பந்துகள் அடிப்படையிலான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜூலை 17 முதல் ஆக.16 வரை நடைபெறும். இதற்காக இங்கிலாந்தின் நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த 100 பந்துகள் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில்  331 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை நாடுகளைச் சேர்ந்த 239 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை.பதிவு செய்துள்ள 570 வீரர்களில் இருந்து ஒவ்வொரு அணியும் 12 வீரர்களைத் தேர்வு செய்யும். வெளிநாட்டு வீரர்களுக்கு ஏலத் தொகை தலா 30, 40, 50, 60, 75 ஆயிரம், 1 லட்சம், 1.25 லட்சம் பவுண்ட் வரை என 7 வகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 1.25 லட்சம் பவுண்ட்ஸ் பிரிவில் உள்ளனர். உள்ளூர் வீரர்களான இங்கிலாந்து வீரர்களுக்கு தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் ஏலம் நாளை நடைபெறுகிறது. அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவர்களுக்கு  கூடுதலாக 10 ஆயிரம் பவுண்ட்ஸ் வழங்கப்படும்.

மூலக்கதை