கடும் நிதி நெருக்கடி : மூடப்பட்ட ஐ.நா.,

தினமலர்  தினமலர்
கடும் நிதி நெருக்கடி : மூடப்பட்ட ஐ.நா.,

நியூயார்க் : கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐநா.சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என ஐநா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா.சபையின் பட்ஜெட்டிற்கு உங்கள் நாடு தனது நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐநா.சபையில் 131 நாடுகளில் இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன.

இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை. இதனால் ஐநா.சபைக்கு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஐநா. தெரிவித்துள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் அலுவலகம் செயல்படாது என ஐநா தெரிவித்துள்ளது.

மூலக்கதை