இன்று நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் டோனி..!

தினகரன்  தினகரன்
இன்று நடைபெறும் இந்தியா  தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் டோனி..!

ராஞ்சி : இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி  ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்க உள்ளது.இந்நிலையில் இந்தப் போட்டியை நேரில் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியை தோனி தனது சிறு வயது நண்பரும் ஜார்கண்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான மிஹிர் திவாகருடன் இணைந்து பார்க்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதற்காக இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து நாளை அதிகாலை ராஞ்சி வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அத்துடன் அவர் நிகழ்ச்சிகளிலும் பெரிதாக பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் தோனி நாளை போட்டியை காண வர உள்ளது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு 100 டிக்கெட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை