கடன் வழங்க முடியாத நிலை

தினமலர்  தினமலர்
கடன் வழங்க முடியாத நிலை

சென்னை: வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் விகிதங்களின் அளவு, நடப்பு நிதியாண்டின் அரையாண்டில் குறைந்துள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வணிக ரீதியில் வழங்கும் கடன் அளவில், வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள், 10 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன் அளவு, கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட, 8 சதவீதம் குறைந்துள்ளது.இந்த கடன்களின் எண்ணிக்கை, 1.68 லட்சம் ஆகும். இதுவே கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு முடிவில், 1.8 லட்சமாகவும், இரண்டாம் அரையாண்டு முடிவில், 1.7லட்சமாகவும் இருந்தன.மேலும், கடன் கேட்டு வரும், 100 விண்ணப்பங்களில், 72 விண்ணப்பங்களுக்கு மட்டுமே, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்கப்படுகின்றன.

இது, கடந்த நிதியாண்டில், 92 விண்ணப்பங்களாக இருந்தது எனவும், ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், நிதி நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள கடன் அளவு அதிகமாக இருப்பதாக, கிரெடிட் ஸ்கோர் ஏஜென்சி வெளிப்படுத்தி உள்ளது.இது குறித்து, நிதி நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது:வங்கிகள், எங்களுக்கு நிதி வழங்குவதில், பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கின்றன. இதனால், கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது.ஐந்து மற்றும் ஆறாம் நிலைநகரங்களில், கடன் கேட்டு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. அவர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை