சீனாவின் பொருளாதார வளர்ச்சி 27 ஆண்டுகளில் இல்லாத சரிவு

தினமலர்  தினமலர்
சீனாவின் பொருளாதார வளர்ச்சி 27 ஆண்டுகளில் இல்லாத சரிவு

பீஜிங்: சீனாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மூன்றாவது காலாண்டில், 6 சதவீதமாக சரிவை கண்டுள்ளது. 1992ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் சரிவாகும் இது.

உலகின், இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல், உள்நாட்டு தேவையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகிய காரணங்களால், வளர்ச்சி குறைவை சந்தித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருந்தது.பொருளாதார நிலையை சரிசெய்யும் வகையில், வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சீன அரசு எடுத்திருந்த போதிலும், இந்த மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பன்னாட்டு நிதியம், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை, 6.2 சதவீதமாக கணித்திருந்த நிலையில், அண்மையில், 6.1 சதவீதமாக குறைத்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.அரசாங்கத்தின் ஆண்டு இலக்கான, 6 முதல் 6.5 சதவீதத்துக்குள் இந்த முடிவுகள் இருப்பதாகவும், இருப்பினும் உலகளாவிய மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் அழுத்தம் இருப்பதாகவும் சீனாவின் தேசிய புள்ளிவிபரங்கள் அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மூலக்கதை