வட்டிவிகித குறைப்பு நிரந்தர தீர்வாக இருக்காது

தினமலர்  தினமலர்
வட்டிவிகித குறைப்பு நிரந்தர தீர்வாக இருக்காது

புதுடில்லி: பொருளாதார மந்தம் மற்றும் தனியார் முதலீடுகள் குறைந்தது ஆகிய காரணங்களால், ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி குறைப்பு முடிவை எடுத்ததாக, கூட்டத்தின் நிகழ்ச்சி பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 4ம் தேதியோடு முடிவடைந்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் இறுதியில், ரிசர்வ் வங்கி, 0.25 சதவீதம் வட்டி குறைப்பை அறிவித்தது.இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ஒட்டு மொத்த உள்நாட்டு தேவை குறைவு, தனியார் நுகர்வு சரிவு, தனியார் முதலீடுகள் குறைவது, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் முடிவை முன்மொழிந்துள்ளார்.

இதையடுத்து, நிதிக் கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும் வட்டி குறைப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.குழு உறுப்பினரான, ரவீந்திர எச் தோலகியா, 0.40 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதத்தை குறைக்கலாம் என தெரிவித்துள்ளார்.மேலும், இன்னொரு உறுப்பினரான சேத்தன் காட், வட்டிவிகித குறைப்புக்கு ஆதரவளித்ததோடு பொருளாதார வளர்ச்சியை உந்துவதற்கு, வட்டிவிகித குறைப்பே நிரந்தர தீர்வாக இருக்காது என தெரிவித்துள்ளதாக, நிகழ்ச்சி பதிவேடு மூலம் தெரியவந்து உள்ளது.

மூலக்கதை