நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் : பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் : பிரதமர் மோடி

ஹரியானா : நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் உள்ளதாக ஹரியானாவின் ஹிசார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாய்மார்கள், சகோதரிகள், விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்காத நிலையை உருவாக்க திட்டம் உள்ளதாகவும் அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீர் மேலாண்மையில் தற்போது உள்ள முறைகளை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் வீட்டு உபயோக நீரை மறுசுழற்சி செய்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க உள்ளோம் என்றும் மோடி தெரிவித்தார்.

மூலக்கதை