தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

தினகரன்  தினகரன்
தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை : தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி வணிகத்துக்காக 25, 26ஆம் தேதிகளில் இரவிலும் கடைகள் திறந்திருக்க அனுமதி கோரிய மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு, ஷிப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பதை முறையாக பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட நிலையில், காவல் துறையினரும் வரம்புகளை வகுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

மூலக்கதை