இந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
இந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு

வாஷிங்டன்: இந்தியா, சீனாவை வளரும் நாடுகளாக, நாங்கள் கருதவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

164 நாடுகள் இடம்பெற்றுள்ள உலக வர்த்தக அமைப்பில், 3 ல் இரண்டு பங்கு நாடுகள் வளரும் நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா, சீனாவுக்கு வளரும் நாடுகள் எனபதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், டிரம்ப் கூறியதாவது: உலக வர்த்தக அமைப்பு எ்ன்ன மாதிரியான அமைப்பு... அவர்கள், சீனாவை வளரும் நாடாக கருதுகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் உலக வர்த்தக அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் சீனாவை வளரும் நாடாக கருதவில்லை.
இந்தியாவை வளரும் நாடாக நாங்கள் கருதவில்லை. இந்தியாவும் சீனாவும் எங்களிடம் இருந்து பலவந்தமாக செல்வத்தை எடுத்து செல்கின்றனர். இனிமேலும் இரு நாடுகளும் வளரும் நாடுகள் அல்ல. உலக வர்த்தக மையம் வழங்கிய, வளரும் நாடு என்ற பெயரை பயன்படுத்தி சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை