மகனை காமெடி படத்தில் அறிமுகப்படுத்துவது ஏன்? தங்கர் பச்சான் விளக்கம்

தினமலர்  தினமலர்
மகனை காமெடி படத்தில் அறிமுகப்படுத்துவது ஏன்? தங்கர் பச்சான் விளக்கம்

இயக்குனர், நடிகர் தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை, ‛டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற காமெடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தை அவரே இயக்குகிறார். மிலனா நாகராஜ், அஸ்வினி சந்திரசேகர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் முனீஷ்காந்த் நடிக்கிறார். மகனை நடிக்க வைப்பது பற்றி தங்கர் பச்சான் கூறியதாவது:

என் மகன் நடிகன் ஆவான் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாள் திடீரென்று நான் நடிக்க வேண்டும் என்றான். அதற்கான பயிற்சிகளை எடுத்துவிட்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். விஷ்காம் படிச்சான், டான்ஸ், பைட், நடிப்பு கத்துகிட்டான். அவனுக்காக எழுதிய கதைதான் இந்தப் படம். காமெடி படமாக இருக்கிறதே என்று அவனே தயங்கினான். ஹீரோவாக யார் வேண்டுமானாலும நடிக்கலாம். மக்களை சிரிக்க வைக்கிற காமெடி கேரக்டரில் நடிப்பதுதான் திறமை, என்று அவனை காமெடி கேரக்டரில் நடிக்க வைக்கிறேன்.

வாழ பணமில்லாமல் தவிக்கும் ஒரு ஏழை இளைஞனுக்கும், பணம் இருந்தும் வாழமுடியாமல் தவிக்கும் ஒரு பணக்காரனுக்கும் இடையிலான உறவுதான் படம். ஏழை இளைஞனாக விஜித் பச்சான் நடிக்கிறார், பணக்காரராக முனீஷ்காந்த் நடிக்கிறார், வில்லன்காளக மன்சூரலிகான், ஸ்டண்ட்சிவா இவர்களுடன் யோகிராம் என்ற புதுமுகம் நடிக்கிறார். எனது வழக்கமான பாணியிலான படம் இல்லை. பக்கா லோக்கல் கமர்ஷியல் படம். என்றார்.

மூலக்கதை