ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்'

தினமலர்  தினமலர்
ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்

ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் ‛உன் காதல் இருந்தால்'. கேரளா தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்துடன் சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் இவர்கள் தவிர ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

ஹாசிம் மரிக்கார் கூறியதாவது: நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. உன் காதல் இருந்தால் என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும்.

இப்படம் உளவியல் திரில்லர். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு. தமிழ் ரசிகர்கள், புது ஸ்ரீகாந்தை இந்தப்படத்தில் பார்ப்பார்கள். அதேபோல், அவர் நடிப்பை பெரிதும் ரசிப்பார்கள். எளிமையாக, யதார்த்தமாக அவருடைய நடிப்பு இருக்கும் என்றார்.

மூலக்கதை