பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

தினமலர்  தினமலர்
பிகில், கைதி  தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு போட்டி போட்டு படங்கள் வெளியாகும். முன்பெல்லாம் சில வருடங்களில் ஐந்து முதல் பத்து படங்கள் வரையெல்லாம் வெளிவந்துள்ளன. ஆனால், இப்போது ஓரிரு படங்கள் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது.

இந்த வருட தீபாவளிக்கு 'பிகில், கைதி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவர உள்ளன. இவற்றில் 'பிகில்' படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்று சொல்லப்பட்டு அதை ஒரு பிரம்மாண்டப் படமாக ஆரம்பத்திலிருந்தே அடையாளப்படுத்தி வருகின்றனர். 'கைதி' படத்தை 'கன்டன்ட் இஸ் கிங்' என அற்புதமான கதை உள்ள படம் என சொல்லி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் புதிய படங்களை வெளியிடும் தியேட்டர்களில் இந்த வருட தீபாவளிப் படங்களான 'பிகில், கைதி' ஆகிய படங்கள் சுமார் 800 தியேட்டர்களில் வெளியாகும் என்கிறார்கள். இதில் 'பிகில்' படம் 500 தியேட்டர்களிலும், 'கைதி' படம் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் 'அசுரன்' படம் மட்டுமே தீபாவளிக்கும் எஞ்சியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

'பிகில், கைதி' இரண்டும் அக்டோபர் 25ல் ஒரே நாளில் வெளியாகாமல் இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களிலாவது வெளியாகும் சூழ்நிலை இருந்திருந்தால் இரண்டு படங்களுமே முதல் நாள் வசூலில் புதிய வசூல் சாதனையைப் படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்குமாம். இப்போது அதில் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

மூலக்கதை