தனியார் பள்ளிகளிலும் மகப்பேறு சலுகைகள்; அசத்திய கேரளா

தினமலர்  தினமலர்
தனியார் பள்ளிகளிலும் மகப்பேறு சலுகைகள்; அசத்திய கேரளா

திருவனந்தபுரம்: 'ஆசிரியைகள் உள்பட, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்படும்' என, கேரளா அறிவித்துள்ளது.


கேரள அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளோம்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கும், 26 வார சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை கிடைக்கும். அதைத் தவிர, பேறுகால சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். பேறுகால மருத்துவச் செலவுக்காக, பெண் ஊழியர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்கள், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உள்ளது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை