அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு விடுமுறை கொடுக்கவில்லை என்று தனியார் நிறுவன தொழிற்சங்கம் தொடுத்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் தலைவர்கள் மறைவு உள்ளிட்ட காரணங்களால் அறிவிக்கப்படும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என்று தெரிவித்த நிலையில், ஊதியம் வழங்க வேண்டுமென்ற தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுமுறை தினத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் ஊதியம் பெற உரிமையில்லை என்றும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை