வைர வியாபாரி நிரவ் மோடியின் அமலாக்கத்துறை வழக்கு

தினமலர்  தினமலர்
வைர வியாபாரி நிரவ் மோடியின் அமலாக்கத்துறை வழக்கு

லண்டன்,: இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவல், நவ., 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

இதையடுத்து, நிரவ் மோடி மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர், நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். கைது செய்தனர்மேலும். நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவரை கைது செய்ய, சர்வதேச போலீசாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடியை, கடந்த மார்ச், 20ல், லண்டன் போலீசார் கைது செய்தனர். அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நிரவ் மோடி, லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.'வீடியோ கான்பரன்ஸ்'இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிந்ததையடுத்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில், அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை, அடுத்த மாதம், 11ம் தேதி வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூலக்கதை