‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்

தினமலர்  தினமலர்
‛ஹவுஸ்புல் 4: மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்புல் 4. பர்ஹாத் சாம்ஜி இயக்கிய இந்த படம் ஹவுஸ்புல் தொடரின் 4வது பாகம். அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், பாபி தியோல், கிர்த்தி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிர்த்தி கர்பண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல் இசையை சோஹைல் சென், பர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும், பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். சுதீப் சாட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1419 ஆண்டில் சதி மற்றும் பழிவாங்கல் காரணமாக 6 காதலர்கள் பிரிந்து, 2019ல் மீண்டும் சந்திக்கிற கதை. இன்றைய காலச் சூழலில் காதலர்கள் மாறி விடுகிறார்கள். பூர்வீக ஜென்ம உண்மை தெரிய வருகிறபோது காதலர்களிடையே என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லும் படம். இதில் வரலாற்றுகால போர்ஷனில் அக்ஷய்குமார் மொட்டை அடித்து வித்தியாசமாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாகிறது.

மூலக்கதை