சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை!

தினகரன்  தினகரன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை!

சென்னை: கடந்த மூன்று வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,668 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,344 ஆகவும் உள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,833 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30664 ஆகவும் உள்ளது. அதே நேரம் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.49.30 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.49,300 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 50 முதல் 800 டன் அளவிற்கே இருக்கும் என உலக தங்க கவுன்சில் ஏற்கெனவே கணித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 761 டன் அளவிற்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை