சம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர்

தினமலர்  தினமலர்
சம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வழிபாட்டு தளத்தில் முகமது ரபீக், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அதன் பராமிப்பாளர் அலி ரஸா, அவருக்கு நீண்ட நாட்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்துள்ளார்.

சம்பளத்தை கேட்டு கேட்டு சோர்ந்து போன ரபீக், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அலி ரஸா, தான் வளர்த்து வந்த சிங்கத்தை அவர் மீது ஏவினார். சற்றும் எதிர்பார்க்காத ரபீக், அலறினார். அதற்குள், சிங்கம் கடிக்க தொடங்கியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அலி ரஸா மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

மூலக்கதை